97
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.