அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர் தீவிர திமுக தொண்டரான இவருக்கு ஈஸ்னோபிலியா எனும் மூச்சுத்திணறல் நோய் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
போதிய வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனையறிந்த நகர திமுக நிர்வாகம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றன.
இதனை பரிசீலித்த முக.ஸ்டாலின் இவரை போன்று பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் 4லட்ச ரூபாய்களை ஒதுகீடு செய்து இருக்கிறார்.
இதனையறிந்த கஃபூர்,தமக்கு தலைமை கழகத்தின் சார்பில் மருத்துவ தேவைக்கு 25ஆயிரம் ஒதுக்கியது மிகவும் சந்தோசம அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.