Home » அதிரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை!

அதிரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை!

0 comment

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்திலும் கொரோனா தொற்றால் தினமும் 4000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனால் தமிழக சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்து கடைப்பிடிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது அதிகப்படியான அபராதம் விதிக்க மாநில சுகாதாரத்துறை மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

அதன் எதிரொலியாக இன்று முதல் மாநிலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி இல்லாத போக்குவரத்துகள், ஷாப்பிங் மால்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது உச்சபட்ச தண்டனை பாயும் என காவல் துறை எச்சரித்து உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter