ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதி இரண்டு அம்ச கோரிக்கைகளுக்காக தர்ணா போராட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருக்கிறது.
இந்த போராத்திற்கு திரு. A. பஹாத் முகமது TARATDAC அதிரை, தலைமை வகிக்கிறார். போராட்டத்தின் கோரிக்கை விளக்கவுரையை திரு. க. கிருஷ்ணமூர்த்தி TARATDAC பட்டுக்கோட்டை நிகழ்த்த இருக்கிறார். மேலும் பலர் வாழ்த்துரை நிகழ்த்துவதோடு நிறைவுறையாக திரு.H.குமரேசன் TARATDAC பட்டுக்கோட்டை அவர்களும், திரு.அக்பர் அலி TARATDAC அதிரை நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளனர்.
போராட்டத்தின் இரு அம்ச கோரிக்கைகள்:
- ஊனமுற்றோர் உரிமைச் சங்கம் 2016 ஐ மாநிலங்களில் அமல்படுத்த ஏதுவாக மாநில அரசு சட்டம் இயற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி அளித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்தவுடன் உத்தரவு வழங்க வேண்டும்.