அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் ஆஸ்பத்திரி சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மின்விளக்கு இரவு நேரங்களில் எறியாமல்,சூரியன் அளிக்கும் வெளிச்சத்திற்கு போட்டியாக பகல் நேரங்களில் ஒளி வீசுகிறது.மேலும் இரவு நேரங்களில் ரம்மியமான இரவிற்கு இன்னும் வலு சேர்க்கிறது.இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் இரவுநேரங்களில் நடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மின்விளக்கை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.