Home » கேரளா செல்லும் பிற மாநிலத்தவர்களின் கவனத்திற்கு!

கேரளா செல்லும் பிற மாநிலத்தவர்களின் கவனத்திற்கு!

0 comment

நாட்டின் பல்வேறு மாநிலங்களைப் பேலவே கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்படுத்த தேவையான பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு புறம் கொரோனா பரிசோதனையைக் கேரள அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் பல புதிய கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அரசு அறிவித்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதுதான் அவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக covid19jagratha.kerala.nic.in என்ற தளத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளா செல்பவர்கள் இதில் முன்பதிவு செய்ய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது மட்டுமின்றி திருமணம், புதுமனை புகுவிழா ஆகியவற்றுக்கும் கேரள அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதாவது திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களும் ‘COVID-19 jagratha portal’ என்ற தளத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் கேரளாவில் நேற்று அமலுக்கு வந்தன.

முன்னதாக, கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் 12 சாலைகளையும் மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள தலைமைச் செயலர் வி பி ஜாய், தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தடை உத்தரவு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஜாய், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எவ்வித சிரமும் இன்றி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 13,835 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 12.21 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் 80,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter