Friday, October 4, 2024

காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் ஷாநவாஸ் ஷேக்!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், கொரோனா இறப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஷாநாவாஸ் ஷேக் என்பவர் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்.

ஷாநவாஸ் ஷேக், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்காகவே கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு குழுவை அமைத்து, தொலைபேசி மூலம் உதவி கேட்கும் நோயாளிகளுக்கு தனது சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி விநியோகித்து வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் இவ்வாறு ஆக்சிஜன் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விற்று அந்தப் பணத்தில் 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

தனது நண்பர் ஒருவரின் மனைவி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆட்டோவிலேயே மரணமடைந்தது தன்னை புரட்டிப்போட்டு விட்டது என்றும், அதற்காகவே மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் அளிக்கும் திட்டத்தைத் துவங்கியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாநவாஸ்.

இதுவரை அவர் சுமார் 4 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரிடர் காலத்தில், அரசே தடுமாறி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு உதவும் ஷாநவாஸ் ஷேக்கிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக்...

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக திமுக கூட்டணி கட்சிகள்...
spot_imgspot_imgspot_imgspot_img