
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது.
மகாரஷ்டிரா,குஜராத் போன்ற வட மாநிலங்களில் இத்தொற்றின் தீவிரம் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இதன் தாக்கம் தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்னிக்கை கூடி கொண்டே செல்வதால் சில கட்டுபாடுகளை மாநில அரசு அறிவித்துள்ள்ளது
இந்நிலையில் கட்டுக்கடங்காமல் பரவும் தொற்றினால் சந்தைகள்,,வழிப்பாட்டு தளங்கள், திரை அரங்குகள் ஷாப்பிங் மால்கள்,கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன.
இதனால் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மூடப்பட்டு விட்டன இருப்பினும் இப்பகுதியில் நோய் தொற்றாளர்களின் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளன.
அதிராம்பட்டிணத்தில் மட்டும் இதுவரை 15மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டரியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி சகஜமாக.நடமாடி வருகிறார்கள் என்றும், இதனை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு மக்களிடம்தான் உள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.