Thursday, March 28, 2024

தமிழகம், கேரளாவை புகழ்ந்து தள்ளும் வடமாநில சேனல்கள் – ஏன் தெரியுமா ?

Share post:

Date:

- Advertisement -

தமிழகம், கேரள மாநிலங்கள் வட மாநிலங்களை விட சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ளதாக வட மாநில சேனல்கள் பாராட்டி வருகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனாவின் முகம் மீண்டும் மக்களை படுத்தி எடுத்து வருகிறது. உலக நாடுகள் எங்கிலும் இல்லாத வகையில் தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நாட்டில் கொரோனா நோயாளிகள் தினமும் பெருகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முக்கியமாக பயன்படும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்று இந்தியா ஒரு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது.

ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு இந்திய விமானப்படை விமானம் மூலமும், ரயில்கள் மூலமும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லை. இது தவிர ஆக்சிஜன் இல்லாமல் ஏராளமான நோயளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.

வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா 2-வது அலையை சரியாக கணித்து திட்டமிடாததே இந்த மோசமான பேரழிவுக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் தென் மாநிலமான தமிழகம் கொரோனா 2-வது அலையை கணித்து முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செய்லபட்டுள்ளது.

ஏனெனில் தமிழத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்பது இல்லை. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிபடுத்தினார்.

சென்னையில் 75% மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி விட்ட நிலையில் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். காய்ச்சல் அதிகம் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் அறிவித்ததால் மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.

வட மாநிலங்களில் மக்கள் சிகிச்சைக்காக சாலையில் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் இந்த மேலாண்மை அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளையும், ஆக்ஸிஜனையும் மாநில அரசு சேமித்து வைத்ததால் நெருக்கடி நிலை தவிர்க்கப்பட்டது. இதனால் தமிழகம் கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டுள்ளது என்று வட மாநில சேனல்கள் தமிழகத்தை போட்டு போட்டு பாராட்டி வருகின்றன.

தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாநிலம் முழுவதும் அனைத்து வசதிகளுடன் உள்ள சிறு, சிறு சிகிச்சை மையங்கள் லேசான தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அதிக வீரியம் கொண்ட நோயாளிகள் பெரிய மருத்துவமனைகளில் சிரமம் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு ஆக்சிஜனும் சேமித்து வைக்கப்பட்டதால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு என்பதும் ஏற்படவில்லை.

தமிழத்தை போல் கேரளாவையும் இதுபோல் முன்மாதிரியாக இருங்கள் என்று வட மாநில சேனல்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. தற்போது இந்த நிலையைதான் வடமாநிலங்கள் பிரதிபலித்து வருகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...