கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் நடுங்கி போயுள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் பிணங்களை எரிக்க சுடுகாட்டில் இடமின்றி பொதுமக்கள் பரிதவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துக்கின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழக கொரொனா விவகாரத்தில் தலையிட்டது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிரை மெயின் ரோட்டில் மட்டும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்த காவல்துறை, தற்போது அதிரை தெருக்களுக்குள் வந்து மாஸ் காட்ட துவங்கிவிட்டது. இதனால் மாஸ்க் போடாமல் ஹாயாக வளம்வந்துக்கொண்டிருந்த உத்தமபுத்தர்கள் எல்லாம் சற்று ஆட்டம் கண்டுள்ளனர். இதனிடையே அடுத்து என்ன நடக்கும்? பக்கத்து கடைக்கு போகும்போதும் மாஸ்க் போட்டுத்தான் ஆகனுமா? என்ற மனக்குமுரல்களையும் நாம் கேட்க முடிகிறது. அவர்களுக்கு எல்லாம் ஒரே வரியில் சொல்வது என்னவென்றால் “ரூ.10/- மாஸ்க் போடு, இல்லனா ரூ.200/- தண்டம் கட்டு”
அதிரையில் தெருவுக்குள் வந்த காவல்துறை!! இனிதான் ஆட்டம் ஆரம்பம்! தண்டம் கட்ட தயாரா?
45