தமிழகத்தில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், பேருந்துக்குள்ளும் மழை நீர் கொட்டுவது, ஆங்காங்கே வாடிக்கையாக இருந்து வருகின்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை வரை செல்லும் A38 நம்பர் கொண்ட TN 49 1555 என்ற வண்டி எண் கொண்ட அரசுப்பேருந்தில் பயணிகள் மழையில் நனைந்துகொண்டு பயணிக்கின்றனர்.இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசுப்பேருந்துகளில் பயணிப்பதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதனை அரசுப்பேருந்து கோட்ட மேலாளர் தனிக்கவனம் செலுத்தி பேருந்துக்களை முறையான பராமரிப்பின்றி இருக்கும் பேருந்துகளை மாற்றி வேறு பேருந்துக்களை அனுப்பவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.