Home » தொடங்கியது வாக்கு எண்ணிக்கை : தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை : தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

0 comment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிகாலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகடிவ்’ சான்றை சமர்ப்பித்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர அவர்களின் உடல் வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை.

இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter