42
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரை விட அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.