176
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நண்பகல் நிலவரப்படி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை 16,067 வாக்குகளும், அதிமுக சின்னத்தில் என்.ஆர்.ரெங்கராஜன் 10,535 வாக்குகளும், சுயேட்சை பாலகிருஷ்ணன் 5,390 வாக்குகளையும் பெற்றுள்ளன. முன்னதாக என்.ஆர்.ரெங்கராஜனின் வாக்குகளை பாலகிருஷ்ணன் பிரித்துவிடுவார் என சொல்லப்பட்டு வந்தது. அதன்படியே அதிமுகவுக்கு பலாப்பழம் டஃப் கொடுத்து வருகிறது. கா.அண்ணாதுரைக்கும், என்.ஆர்.ரெங்கராஜனுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5,532 மட்டுமே. ஆனால் பாலகிருஷ்ணன் பெற்ற வாக்கு 5,390ஆக உள்ளது. இதனால் அதிமுக-தமாகா கூட்டணியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.