தென் கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து புயலாக வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அதிரை புதுமனைத் தெரு 19 வது வார்டு ஹனீஃப் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின் இணைப்பு வருவதற்கு முன்னர் விரைந்து மின் வாரியம் சரி செய்ய வேண்டும் என்று அங்குள்ள இளைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.