44
திமுக தலைமையிலான கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தங்க. கதிரவன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம் :
ஆளூர் ஷா நவாஸ்(விசிக) – 66,281
தங்க. கதிரவன்(அதிமுக) – 59,043
நாம் தமிழர் கட்சி – 8,187
அமமுக – 2,884
மக்கள் நீதி மய்யம் – 2,143