மே4 கத்தரி வெயிலின் உக்கிரம் தொடங்கும் நாள் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தன.
இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால் நடைகளும் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருந்தன.
ஒரு புறம் ரமலான் காலம் என்பதால் பகல் நேரங்களில் தாகத்தின் உக்கிரம் தீவிரமடையும்.
இந்த நிலையில் அதிரையின் கத்தரி வெயிலை கலங்கடிக்கும்படி கம்பீரமாக பெய்தன மழை.
கோடை வெயிலின் உஷ்னம் உடலை வருதெடுத்த நிலையில்,கத்தரி எனும் காண்டாமிருகம் என்ன பாடு படுத்த போகுதோ என்று கலங்கி நின்ற அதிரையர்களுக்கு இம்மழை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.