ஏரிபுரக்கரை எல்லைக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் வசதி,சாலை வசதி ஆகியவற்றை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனிடையே தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்பணி தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அப்பணியை விரைந்து முடித்து சாலைகளை செப்பனிட வேண்டும் என கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சகித்து கொள்ள வேண்டும் என ஜாஸ்மின் கமால் கேட்டு கொண்டுள்ளார்.வடிகால் பணி முழுமை பெற்ற உடன் சாலை செப்பனிடும் பணி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ” கவுன்சிலர் ஆகியோரின் ஒத்துழைப்போடு விரைவில்!!! துவங்கும் என்றும் கவுன்சிலர் தெரிவித்தார்.கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக அரசு பொது முடக்கம் அறிவித்துள்ளன இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவதை நிறுத்திகொள்ள வேண்டப்படுகிறார்கள்.நோய் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்,தேவைப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் சுகாதாரத்தின் முன்மாதிரி கிராமமாக பிலால் நகரை மாற்ற நாம் அனைவரும் ஒத்துழைப்போம் என்றார்.
