Home » தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வார் ரூம் – தாரேஷ் அகமது ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வார் ரூம் – தாரேஷ் அகமது ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகள் நியமனம்!

0 comment

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (War Room) தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆகிஸிஜன் மற்றும் படுக்கைகளை கண்காணிக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (வார் ரூம்) தொடங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தாரேஷ் அகமது ஐஏஎஸ் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்ற்கு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கைகளை கட்டளை மையம் கண்காணிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 104 என்ற எண் மூலம் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம். அதன் மூலம் அரசு மருத்துவமனை படுக்கை, ஆக்சிஜன் படுக்கை , ரெம்படிசிவர் மருந்து எங்கு கிடைக்கும், தனியார் மருத்துவமனை படுக்கை, எங்கு எவ்வளவு இடம் உள்ளது எனவும் 108 ஆம்புலன்ஸ் எங்கு உள்ளது என்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter