Home » தமிழக லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிப்பு !

தமிழக லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிப்பு !

0 comment

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன், அத்தியவாசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பழ கடைகள் திறப்பு, நாட்டுமருந்து கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் தளர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.

  1. காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
  2. அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
  3. இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Continuous Process Industries manufacturing Essential items) இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம்” (Helpline) 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629
93496, 99629-93497.

  1. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter