அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்துவருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது.வானிலை ஆய்வுமையம் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தெரிவித்திருந்தது. நேற்று முன் தினத்திலிருந்து கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது.இதனால் கடலோர பகுதியான அதிரையில் கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.மேலும் சாலைப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த தொடர்மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.