பாதுகாப்புடன் சந்தோசமாக கொண்டாடிட வேண்டுகோள்
பொன்னமராவதி: அதிராம்பட்டிணத்தின் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் செங்கமல கண்ணன், நேர்மையான அணுகுமுறையினால் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தற்போது பொன்னமராவதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்து வருகிறார்.
அதிரையர்களின் அன்பை பெற்ற இவர் எங்கிருந்த போதிலும் அதிரை மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அவ்வபோது வந்து செல்பவர்.
இளைஞர்கள் மத்தியில் அன்பை கலந்து நேரிய பாதையில் செல்ல அறிவுரை கூறிய இவர் அதிரையர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இந்த ஈகை திருநாளை கொண்டாடி மிகிழ வேண்டும் என வாழ்த்தினார்.
இன்று காலை அதிரை எக்ஸ்பிரசை தொடர்பு கொண்ட அவர், கொரோனா தீவிரமாக பரவி வரும் இத்தருவாயில் பொறுப்புடன் செயலாற்றி இந்த பெரு நாளை கொண்டாடி மகிழ கேட்டு கொண்டார்.
மேலும் சங்கடங்கள் நீங்கி சகோதரத்துவம் மேலோங்கிட தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.