97
பரவி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் இழக்கும் வாழ்வாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் முதலமைச்சராக பதவியேற்ற முக ஸ்டாலின் முதல் தவனையாக ₹2000 அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டத்தை அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டம்,புதுப்பட்டிணம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.