Home » கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

by
0 comment

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை நகர தமுமுக ஆம்புலன்சை தாமரங்கோட்டை மக்களின் சேவைக்காக வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், கா.அண்ணாதுரை முன்னிலையில் தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்களது ஆம்புலன்சை சேவைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த நிகழ்வின்போது அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதனிடையே பணிகள் முடிந்ததும் தமுமுக ஆம்புலன்ஸ் அதிரை திரும்பியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter