தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் 8-வது வார்டு பகுதியை அதிரை பேரூராட்சி முற்றிலும் புறக்கணித்து வருவதாக அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4க்கு தகவல் தெருவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிக்கு கொட்டும் மழையும் பாராமல் சென்ற சுற்றுசூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியை அதிராம்பட்டினம் பேரூராட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாற்றியுள்ளனர்.
இன்று வரை அப்பகுதியில் குப்பைகள் அள்ளுவது இல்லையென்றும், இதனால் அப்பகுதியில் டெங்கு போன்ற கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் ஆய்வு செய்த நிர்வாகிகளிடம் கூறினார்.
வீடியோ இணைப்பு : [youtube https://www.youtube.com/watch?v=HpOHQ2phQQk?rel=0&controls=0&showinfo=0]
இதனையடுத்து கடற்கரை தெரு 8-வது வார்டு பகுதியை பார்வையிட்ட சுற்று சூழல் மன்றம் 90.4 நிர்வாகிகள் சார்பில் அரசு நிர்வாகிகளிடம் , மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் புகார் அளிக்க முடிவுசெய்துள்ளனர்