Home » 8 அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்!

8 அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்!

0 comment

8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்களே மருத்துவமனையின் டீனாகவும் செயல்படுவர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் விவரம்:

  1. மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter