79
அதிராம்பட்டினம் , சேதுபவாசத்திரம் பகுதிகளில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வந்ததால் அதிராம்பட்டினம் , கீழத்தோட்டம் கடலோர வாழ் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக கடலுக்கு செல்லும் வாய்க்காலில் நிறுத்தபட்டிருந்த படகுகளை எடுக்க சென்றனர், அப்போது 6அடி ஆழமுள்ள வாய்க்கால் நீர் வடிந்து படகுகள் தரை தட்டி நின்றதால் மீனவர்கள் பதற்றம் அடைந்தனர்.இதேபோன்ற கடந்து ஆண்டு அரை கிலோ மீட்டர் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.