தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து எடுக்கும் திடக்கழிவுகளை கடற்கரைத் தெரு மைதானம் (ITI) வழியாகவே பேரூராட்சி துப்புரவாளர்கள் கொட்டி விடுகின்றனர்.
இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை.இது குறித்து கேட்கையில் அப்பகுதி மக்கள் கூறியதாவது; பொதுவாக அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் கடற்கரைத்தெரு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.இந்த இடத்தில் திடக்கழிவு குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.மூன்று,நான்கு நாட்கள் அந்த குப்பையை யாரும் அள்ள வருவதில்லை.இதுகுறித்து யாராவது பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் மட்டும் தான் குப்பைகள் அப்புறப்படுத்திகின்றனர்.
மேலும் குப்பைகள் எடுக்க பயன்படுத்தும் வாளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.அதிகாரிகள் பல இடங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் சூழல் இருந்தால் அபராதம் விதிக்கின்றனர் என்ற செய்தி பார்க்க முடிகிறது.ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக பேரூராட்சி நிர்வாகமே நோயை பரப்புகின்ற அளவிற்கு சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த வழியாக தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்கின்றனர்.இந்த பகுதியில்
தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதி வழியாக செல்வதற்கே யோசிக்கின்றனர்.இதனை உடனுக்குடன் அங்கு கொட்டப்படும் குப்பைகளை,தெருப்பகுதியில் இருக்கும் குப்பைகளையும் அப்புறப்படுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.