அதிரையில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து மக்களின் நம்பிக்கையை பெற்று ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு நேர்த்தியாக உரிய விளக்கத்தை அளித்து வரும் ஆமீனாஸ் நிறுவனம், தரத்தில் சமரசம் இல்லை என்ற நோக்கத்துடன் முன்னேறுகிறது. இந்த சூழலில் கட்டடத்திற்கான ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் தூண்களின் (Pillars/Columns) தரம் குறித்து அனைவரும் ஓரளவு அறிந்துக்கொள்ள வேண்டும் என ஆமீனாஸ் விரும்புகிறது.
அதன்படி கட்டடம்/வீட்டிற்கான தூண்களுக்கு தேவைக்கு ஏற்ப டி.எம்.டி கம்பியை பயன்படுத்த வேண்டும். தூண்களில் 10mm டி.எம்.டி கம்பியை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. அடுத்ததாக சிமெண்ட்:மணல்:ஜல்லி கொண்ட 1 Cu.m கான்கிரீட்டில் குறைந்தபட்சம் 320கிலோ சிமெண்ட் இருக்க வேண்டும். கான்கிரீட்டை நன்கு பேக் செய்வது அவசியம்.
இவ்வாறு கான்கிரீட் போடப்பட்டு 20 நாட்கள் கழித்து ஹேம்பர் ரிபவுண்ட் டெஸ்ட் எடுப்பதன் மூலம் கான்கிரீட்டின் வலிமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியலாம். இதில் M15 முதல் M45 வரையிலான கிரேடுகள் உள்ளன.
ஆமீனாஸ் கட்டுமான நிறுவனத்தின் சைட்டில் எடுக்கப்பட்ட ஹேம்பர் ரிபவுண்ட் டெஸ்ட்டில் M30 முதல் M34 வரையிலான கான்கிரீட்டின் வலிமை பதிவாகியுள்ளது.
உங்கள் கனவு இல்லத்தை தலைமுறை கடந்தும் நிலைத்திட செய்திடுங்கள். வாழ்த்துக்கள்…
-Z.முகம்மது அபூபக்கர்,
ஆமீனாஸ் கட்டுமான, நிறுவனம்.
+91 8870717484 / +91 88 708 44556
