கடந்த இரண்டு வாரங்களாக பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி தாக்குதல் நடத்தியது. இப்படி தொடர்ந்து 11 நாட்களாக இரு நாடுகளிலும் மிக பெரிய சேதமும் உயிர் பலியும் ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மேலும் பாதுகாப்பு அமைச்சரவை அறிக்கை “பரஸ்பர மற்றும் நிபந்தனையற்றது” என்று கூறியது.
இதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு (இங்கிலாந்து நேரம் நள்ளிரவு) தொடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியிருந்தது.
கடந்த 11 நாட்களாக நீடித்து வந்த சண்டையில் சுமார் 230 பாலஸ்தீனர்களும் , 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் போர் நிறுத்தம் காரணமாக பாலஸ்தீன மக்கள் வீதிகளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.








