Home » ‘வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ – ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் அதிரடி!

‘வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ – ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் அதிரடி!

0 comment

வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா குறித்த கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து புதிய தகவல்கள் வரும் வரை தாம் எதுவும் பேசப் போவது இல்லை என கூறியிருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்திய குடியுரிமை உள்ளிட்ட விவகாரங்களை சிலர் கேள்விக்குள்ளாக்கினர்.

அதேபோல் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜாவும், ஜக்கி வாசுதேவ் பற்றி அமைச்சர் தியாகராஜன் பேசாமல் வாயை மூட வேண்டும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பூர்வீகத்தைப் பற்றி பேசுவோம் என்றார். எச். ராஜாவின் இந்த விமர்சனம் தொடர்பாக அமைச்சர் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:

நான் புதுசாக பொறுப்பேற்றிருக்கிறேன். நாங்கள் 5 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்படப் போகிறோம். நான் ஒரு அடிப்படை கருத்து சொல்லப் போகிறேன். தயவு செய்து இதை நல்ல எண்ணத்துடன் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடம் எந்த கருத்தை எந்த நேரத்தில் எடுத்து வெளியிடுவது என்பதற்கு அடிப்படையான ஒருலிமிட் வேண்டும். தயவு செய்து மனிதன் பேசுகிற, தகுதியுள்ள மனிதன் பேசுகிற விமர்சனம், கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் சொல்கிறேன்.

வெறிபிடிச்ச நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் என்கிட்ட வந்து கேட்டீங்கன்னா.. நான் நாட்டின் அமைச்சர். எதுக்கு பதில் சொல்லனும்? எதில் சொல்ல கூடாதுன்னு இருக்கு.. தயவு செய்து இந்த மாதிரி நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter