Home » அதிரையில் உச்சத்தை தொட்ட விலைவாசி

அதிரையில் உச்சத்தை தொட்ட விலைவாசி

by
0 comment

கொரானோ அதீத பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு நாளை திங்கள் கிழமை முதல் 31ந் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலையும் இன்று திங்கள் கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தது.

அறிவிப்பு வெளியான சில மணி துளிகளிலேயே அனைத்து கடைகளையும் வணிகர்கள் திறந்ததவுடன் “இந்த இரண்டு நாளை தவிர பொருளே இனி கிடைக்காது” என்பதை போன்ற அறியாமையில் மக்கள் வணிக நிறுவனங்களை, கடைகளை குழும ஆரம்பித்துவிட்டனர்.

இதை சம்பாரிக்க வாய்ப்பாக பயன்படுத்திகொண்ட அதிரை வியாபாரிகள் அத்தியாவசிய பொருள்கள் முதல் பல பொருள்களின் விலையை அதிகரித்து விற்றது மக்களிடையே சலசலப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை காலையில் விற்ற விலையை விட கூடுதல் விலை வைத்து அன்று மாலையே விற்பனை செய்தது மக்களை முகம் சுளிக்க வைத்தது.

இன்று ஞாயிற்று கிழமை அதைவிட எல்லா கடைகளிலும் கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்தவுடன் வியாபாரிகள் இன்னும் கூடுதலாக விலை வைத்து விற்றதை காணும் போது அதிரை வியாபாரிகளிடம் மனிததன்மையும் நியாய உணர்வும் குறைந்து போய்விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

இந்த கொரானோ காலத்தில் தொழில், வியாபாரம், வேலை என எல்லாவற்றிலும் வருமானம் குறைந்து மக்கள் அல்லலுறும் இவ்வேளையில் சூழ்நிலையை கருத்தில்கொண்டு நியாயமான இலாபத்தில் விற்கலாமே என்ற எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும் அனைவர் மனதிலுமே ஓடுகிறது.

இப்படியான சூழ்நிலை இருந்தபோதும் “மக்களுக்கும் செய்யும் சேவை மகேசனுக்கு(இறைவனுக்கு) செய்யகூடிய சேவை” என கொள்முதல் விலைக்கு ஏற்ப, ஊரடங்கு இல்லா காலத்தில் விற்ற விலையிலேயே சிலர் விற்பனை செய்தது மனதிற்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

கூட்டம் கூடுவதை தவிர்ப்போம், சமூக இடைவெளி பின்பற்றுவோம், முக கவசம் அணிவோம், ஊரடங்கை கடைபிடித்து வீட்டிலிருப்போம், கொரானோவை வென்று காட்டுவோம்.

அன்புடன்

அதிரை உபயா

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter