கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள வேளையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்டு மருந்துகளை சாப்பிட்டு கொள்ள சுகாதார துறை சார்பில் அறிவுருத்த படுகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த கொரோனா காலகட்டத்தில் சமூக அமைப்புகள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கபசுரக் குடிநீரை பொது மக்களுக்கு பருக வழங்கினர்.
கொரோனா இரண்டாம் அலையில் தொற்து தீவிரமாக பரவி வரும் இவ்வேளையில் அதிராம்பட்டிணம் பேரூந்து நிலைய வளாகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் நகர IRCS சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடி நீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நாளை முதல் பொது முடக்கம் தீவிரப்படுத்தப்பட உள்ள தருவாயில் இன்று சந்தைகளுக்கு வரும் மக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டன.
முன்னதாக அதிராம்பட்டிணம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் கலந்து கொண்டும் தொடங்கி வைத்தார்.
இதில் IRCS செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான் பொருளாளர் இஸட்.அகமது மன்சூர் உள்ளிட்ட IRCS நிர்வாகிகள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


