கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுக்கு தகுதியானவர்களை தேர்வுகுழு தேர்வு செய்து அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது.
இந்தநிலையில் அதிரை எக்ஸ்பிரஸ் கேள்வி பதில் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களின் பெயர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவரும் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி பாராட்டு கடிதங்களை அனுப்பியுள்ளார். அதனை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் மணிச்சுடர் சாகுல் ஹமீது, அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை நிருபர் அன்சர்தீனிடம் ஒப்படைத்தார். அப்போது முஸ்லீம் லீக்கின் தஞ்சை மாவட்ட பிரதிநிதி ஜமால், அதிரை எக்ஸ்பிரஸ் பிலால் நகர் நிருபர் இம்ரான் பாரிஸ், செயல் அலுவலர் அஸ்ரஃப், ஆஸ்பத்திரி தெரு நிருபர் பாய்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
விரைவில் நடைபெற கூடிய அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுக்கு இந்த பாராட்டு கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. இதனை வெல்லப்போவது யாரு? இணைப்பில் இருங்கள் அதிரையர்களின் இணையத்துடிப்புடன்.
