மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
ஆனால் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.