தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வழங்கபட்டு வருகிறது. அங்கு இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜனின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.
இதனை அடுத்து திமுக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், கொரோனா சிகிச்சைக்கு நிதியாக ரூ.1,25,000க்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுகொண்ட கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி இந்த நிதியை கொரோனா மையத்தின் மேம்பாடு, உயிர்வலி ஆகியவைகளுக்கு செலவிடப்படும் என்றார்.