தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். இவர் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் துரை. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(24/05/2021) மரணம் அடைந்து விட்டார்.
அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் TNTJ தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படி TNTJ முன் களப்பணியாளர்களால் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணனின் உடலை அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை. வையாபுரி பாராட்டு தெரிவித்தார். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 23 நபர்களின் உடல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்டத்தினர் அடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.