தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை பகுதி மக்கள் இன்று (01/12/2017) மாலை பேருந்தை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கொட்டை முக்கூட்டுச்சாலை பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் சுந்தரேசன் (55) அவர்கள் நேற்று(30/11/2017) மாலை சாலையோரம் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் வந்த அரசு பேருந்து ஒன்று அவரை இடித்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதனிடையே , அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பிறகு, அவருக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அறுவை சிகிச்சை மூலம் சுந்தரேசனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுந்தரேசனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
நேற்று நிற்காமல் சென்ற அரசு பேருந்தை இன்று(01/12/2017) மாலை அப்பகுதி மக்கள் மறித்து முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த அதிரை காவல் நிலைய ஆய்வாளர் திரு. தியாகராஜ் அவர்கள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார் முற்றுகையிட்ட சுந்தரேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து அப்பேருந்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் களைந்துசென்றனர்.