48
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறுகுறு தொழில்கள் மற்றும் குறைந்தழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என தமிழ் நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.