Home » Prepaid to Postpaid: நிமிடங்களில் மாற்றலாம், ஒரு OTP மூலம் வேலை முடியும்

Prepaid to Postpaid: நிமிடங்களில் மாற்றலாம், ஒரு OTP மூலம் வேலை முடியும்

0 comment

புதுடெல்லி : மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் திட்டத்தை ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்டாக மாற்ற டிராய் (TRAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

உங்கள் திட்டத்தை ஒரு OTP மூலம் இனி ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், இந்த விதியில், ப்ரீபெய்டிலிருந்து (Prepaid) போஸ்ட்பெய்டுக்கு மாறும் போது, மொபைலின் சேவை 30 நிமிடங்களுக்கு மேலாக தடைபடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை எவ்வாறு செய்வது என இங்கே காணலாம்.

எஸ்எம்எஸ் வழியாக கோரிக்கையை அனுப்பவும்
ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு (Postpaid) மாற்ற, உங்கள் தற்போதைய இணைப்பிலிருந்து எஸ்எம்எஸ், ஐவிஆர்எஸ், வலைத்தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலி மூலம் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.

செய்தி உங்கள் மொபைல் எண்ணில் வரும்
கோரிக்கை பெறப்பட்ட பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். நீங்கள் ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்ற கோரியுள்ளீர்கள் என செய்தியில் எழுதப்பட்டிருக்கும். இந்த செய்தியில் ஒரு பிரத்யேகமான பரிமாற்ற ஐ.டி. (Unique Transaction ID) இருக்கும். மேலும் ஒரு OTP-யும் அனுப்பப்படும். 10 நிமிடங்களுக்குள் OTP காலாவதியாகிவிடும்

OTP மூலம் சரிபார்க்கப்படும்
OTP சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் சிம் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டாக மாற்றப்படும்.

மாற்றப்படும் தேதி உங்களுக்குத் தெரிவிக்கப்படும்
செய்தியாகவோ அல்லது ஐவிஆர்எஸ் மூலமோ ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்டாக மாற்றப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். இதற்குப் பிறகு, திட்டமிடப்பட்ட நேரம் மற்றும் தேதிக்குள் உங்கள் ப்ரீபெய்ட் திட்டம் போஸ்ட்பெய்ட் திட்டமாக மாற்றப்படும்.

30 நிமிடங்களுக்கு மேல் சேவை தடைபடாது
ப்ரீபெய்டிலிருந்து போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு மாற்றும் செயல்முறையில், உங்களது சேவை (Mobile Service) 30 நிமிடங்களுக்கு மேல் தடைபடாது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter