53
லட்சதீவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் நோக்கில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இணைவழி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க ஆணையிட்டது.
அதன் அடிப்படையில் அதிராம்பட்டிணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நகர தலைவர் கேகே ஹாஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஷேக் அப்துல்லாஹ், அபுபக்கர்ஜமால்,ஷாகுல் ஹமீது,ஜஹபர், முஹம்மது ஹசன் உள்ளிட்ட கட்சியில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.