தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாக மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
இதன் எதிரொலியாக இன்று (ஜூன்.1) வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டு உடனடி ஏற்பாடாக தண்ணீர் வழங்குவதற்குண்டான வழிவகைகளை செய்தனர். இதனால் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.