Home » மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்..!!

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்..!!

0 comment

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால் கொரோனா பேரிடர் உதவி மையத்தை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம் இன்று(ஜூன்.2) துவக்கி வைத்தார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.இந்த சேவை மையத்தின் வாயிலாக மனநல ஆலோசனை வழங்குதல், தனிமை படுத்தியிருத்தல் குறித்த ஆலோசனைகள், மருத்துவமனை வழிகாட்டுதல்கள்,ஆம்புலன்ஸ் சேவைகள், ஆக்சிஜன் பல்ஸ் பரிசோதனை, கபசுர குடிநீர் பொடி விநியோகம், வைட்டமின் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகள், அரசு காப்பீடு திட்டம் குறித்த விளக்கங்கள், உடல் அடக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிகழ்ச்சியில் அழகியநாயகபுரம் அரசு மருத்துவர் தமிழ்ச்செல்வன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன்,மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது தம்பி,நகரத்தலைவர் ரபீக்கான்,நகரத்துணைத்தலைவர் பாவா முகைதீன்,SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அஸ்கர்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் கமரூதின்,செயலாளர் அசன் முகைதீன்,மல்லிப்பட்டினம் திமுக கிளைச் செயலாளர் ஹபீப் முகமது, சமுதாய நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter