அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு கடற்கரைத் தெரு பகுதியில் கடந்த 20 வருடங்களாக பேரூராட்சியில் தொடர் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே செய்து தரும் நிலைமை இன்று வரை இருக்கிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு பகுதியை ஆய்வுகள் மேற்கொண்டு,பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்த அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 நிர்வாகத்திற்கு கடற்கரைத்தெரு ஜமாத் , தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தெருவாசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மேலும் வளர எங்களுடைய துஆக்கள்.
அதிகாரிகளுக்கு கொண்டு செல்லும் வண்ணம் கடற்கரைத்தெரு சம்மந்தமாக செய்திகளை தெளிவாக தொகுத்து வழங்கி வரும் ADIRAIXPRESS இணையதள சகோதரர்களுக்கு கடற்கரைத்தெரு ஜமாத் , தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தெருவாசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.