63
ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.