தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி மதராஷாவில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த பரிசோதனை முகாமிற்கு அழகியநாயகிபுரம் மருத்துவர் ஜனனி தலைமை தாங்கினார்.இரண்டாம்புளிக்காடு கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து முன்னிலை வகித்தார்.இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுகாதர ஆய்வாளர் முகுந்தன், மல்லிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதர செவிலியர் மாலதி மற்றும் கிராம உதவியாளர்கள் ராஜபாண்டி,சுதாகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.