Home » அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!

அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!

0 comment

அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த நிர்வாகியும் எங்கள் அன்பு தம்பியுமான MA சாதீக் பாட்ஷா இறை அழைப்பை ஏற்று கொண்டுவிட்டார் என்ற செய்தி என்னை நிலை குழைய செய்து விட்டன.

சமூகத்திற்கு சங்கடங்கள் ஏற்படும் போதெல்லாம் சளைக்காமல் களமாடும் என் அன்பு தம்பி இறைவனடி சேர்ந்தார் என்றால் நம்ப இயலவில்லை. துடிப்பான, திடகாத்திரமான இளைஞரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்ககுக்கு இறைவன் அழகிய பொறுமையை கொடுக்க வேண்டும்.
அதோடு நான் சார்ந்துள்ள்ள தமுமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்வதோடு மரணித்த தம்பியின் மறுமை வாழ்வு சிறக்கவும், எல்லாம் வல்ல ஏகனிடத்தில் இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்…

இறைவா இவர் செய்த பாவங்களை அலட்சிய படுத்துவாயாக, இவரை பனிக்கட்டியாளும் ஆலங்கட்டியாளும் சுத்தப்படுத்துவாயாக
உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்க பூஞ்சோலையை வழங்கிடுவாயாக! என எந்நாளும் அவருக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தமுமுக துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter