85
அதிரை காவல் நிலையத்தின் பக்கவாட்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயம் அமைந்துள்ளது. ஊராடங்கினால் மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயத்தின் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் இத்தகைய செயல் காவல் நிலையம் அருகிலேயே நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிரை தேவாலயத்தில் கண்ணாடிகள் உடைக்கப்படுவது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.