அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு கண்ணில் அழுத்தம் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மூக்கு கண்ணாடிக்கு போதிய வசதியின்றி தவித்து உள்ளார்.
இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிட அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.
இதனை ஏற்ற ரோட்டரி சங்க அதிரை நிர்வாகிகள் அப் பெண்மணியின் மருத்துவ சீட்டை பெற்றுகொண்டு பரிசீலித்து கண்ணாடி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
அதனடிப்படையில் இன்று மாலை புஷ்பலாதவிற்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு கண்ணாடியை வழங்கினர்.