அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம் மூலம் முன்னரே அறிவித்திருந்தனர்.
அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களின் அனைத்து ஆவணங்களோடு ஓட்டுனர் உரிமம் போன்றவற்றின் நகலை சமர்ப்பித்து ஒரு சாட்சியை கூட்டி வருவதோடு இருவரின் கையோப்பமும் பெற்று அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் வாகனங்கள் விடுவிக்கபடுகிறது.
முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது ஏதேனும் குற்றசெயல் பிண்ணனி கொண்ட வாகனங்கள் விடுவிக்கபட மாட்டாது.
விடுவிக்கடும் வாகனங்களில் ஏதேனும் ஆவண குறைபாடு (ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ், Rc புக்) விடுபட்டு இருந்தால் அதற்கு ஏற்றவாறு ஆன்லைனில் அபராதம் விதிக்கபட்டு அதை போட்டோ, வீடியோ மூலம் பதிவு செய்யபட்டு உரியவரிடம் வாகனம் ஒப்படைக்கட்டு விடுவிக்கபடும்.
எனவே வாகனத்தின் உரிய ஆவணங்களின் நகலையும் ஓட்டுனர் உரிம நகலையும் கூடவே ஒரு சாட்சியையும் கூட்டி சென்று வாகனத்தை பெற்று கொள்ளுங்கள்.
(12.6.21) இன்று மே 27 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் கைபற்றபட்ட வாகனங்கள் விடுவிக்கபடுகிறது. இந்த தேதிகளில் வாகனம் பிடிபட்டோர் இன்று உடனடியாக சென்று வாங்கி கொள்ளுங்கள். நாளை(13.6.21) மே 29 மற்றும் மே30 ஆகிய தேதிகளில் பிடிபட்ட வாகனங்கள் விடுவிக்கபடும்.
முக கவசம் அணிவோம்.
சமூக இடைவெளி பின்பற்றுவோம்.
அவசிய தேவையன்றி வெளியில் வராமல் தனித்திருப்போம்.
கொரானோவை வெல்வோம்.